கொரோனாவுக்கு முதியவர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 648 ஆனது. இதற்கிடையே நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story