கோவையில் ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு
கோவையில் ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு
கோவை
நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த ராணுவ பணிக்கான (தொகுதி-2) எழுத்துத் தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 2,329 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சபர்பன் பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் அரசு உதவி பெறும் பள்ளி, ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் 2 மையங்கள் என 7 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
காலை 9 மணி முதல் 11 மணி, மதியம் 12 மணி முதல் 2 மணி, மாலை 3 மணி முதல் 5 மணி வரை என்று 3 கட்டங்களாக தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
அப்போது அவர்களை சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் தேர்வு மையத்துக்குள் செல்போன் உள்பட டிஜிட்டல் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப் பட்டது.
கோவை மாவட்டத்தில் 51 சதவீதம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். கலெக்டர் தலைமையில் 217 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story