காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
உபரிநீர் வெளியேற்றம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் விறுவிறுவென நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் போன்ற ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முழு கொள்ளளவை எட்டியது
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 381 ஏரிகளில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
78 ஏரிகள் 70 சதவீதமும், 43 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 446 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 77 ஏரிகள் 70 சதவீதமும், 3 ஏரிகள் 50 சதவீதமும், 2 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. இதேபோல ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 452 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
168 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. இதேபோல ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 2512 குளங்களில், 2,083 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. 429 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளது.
Related Tags :
Next Story