இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது
இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைதுஇந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது
கோவை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்ய கோரியும், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் கூறுகையில், "புதிய கல்விக் கொள்கையில், குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. அரசு புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த அரசு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்." என்றார்.
இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை தீ வைத்து எரிக்க முயன்றனர். மேலும் ஒரு சிலர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும் ஒரு சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






