2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு


2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
x
2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

கோவை

கோவையில் கொரோனா பாதிப்பு தினசரி 100-க்கும் மேல் இருந்து வருகிறது. இதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதற்கிடையே கோவையில் தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுகுறித்து மாநகராட்சி சுகாதார துறையினர் கூறுகையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் வீட்டுக்குள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

மழைக்காலம் என்பதால் கோவை மாநகராட்சி பகுதியில் தினமும் 64 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Next Story