118 பேருக்கு கொரோனா உறுதி


118 பேருக்கு கொரோனா உறுதி
x
118 பேருக்கு கொரோனா உறுதி
தினத்தந்தி 16 Nov 2021 9:34 PM IST (Updated: 16 Nov 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

118 பேருக்கு கொரோனா உறுதி

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 547 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 110 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதன் மூலம் தொற்றால் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 922-ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட 1,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று கொரோனா காரணமாக கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,440-ஆகஉயர்ந்துள்ளது.
--------------------

Next Story