பொள்ளாச்சியில் திருநங்கைகளின் உணவு திருவிழா
பொள்ளாச்சியில் திருநங்கைகளின் உணவு திருவிழா
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் திருநங்கைகளின் உணவு திருவிழா நடைபெற்றது.
ஓவிய கண்காட்சி
திருநங்கைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பொள்ளாச்சியில் உணவு திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. உணவு திருவிழாவில் திருநங்கைகள் சமைத்த உணவுகள் பரிமாறப்பட்டன.
இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். மேலும் திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
திருநங்கைகளின் நிலையை உணர்த்தும் வகையில் வைக்கப்பட்டு இருந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் கல்கி சுப்பிரமணியம் மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது:-
திருநங்கைகளின் திறமைகள்
பொள்ளாச்சியில் முதல் முறையாக திருநங்கைகளின் உணவு திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 11 சமையல் கலைஞர்கள் தங்களது வித, விதமான உணவுகளை பரிமாறினார்கள். 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதை ஏராளமான மக்கள் பார்த்து செல்கின்றனர்.
திருநங்கைகளின் திறமையை அரசும், தனியார் நிறுவனங்களும் ஆதரவு கொடுத்து வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். திருநங்கைகளில் ஏராளமான தொழில் முனைவோர்கள் உள்ளனர்.
வருமானம் இல்லை
பொள்ளாச்சியில் நடக்கிற இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும். திருநங்கைகள் பலர் திறமை யானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. அவர்களுக்கு வருமானம் கிடைக்கவும், மக்கள் முன் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story