வால்பாறையில் கொசு தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு
வால்பாறையில் கொசு தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு
வால்பாறை
வால்பாறையில் கொசு தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தேயிலை செடிகள்
வால்பாறையில் தேயிலை, காபி, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் தேயிலைதான் அதிகளவில் இருக்கிறது. தேயிலை தோட்டங்களிலும், காபி தோட்டங்களிலும் ஊடு பயிராக மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.
இதில் ஆண்டு முழுவதும் பயன்தரக்கூடிய தேயிலை செடிகளை அந்தந்த காலசூழ்நிலைக்கு ஏற்ப பூச்சிகள் தாக்கி வருகின்றன. தற் போது வால்பாறையில் மழை குறைந்து பனிக்காலம் தொடங்கிய நிலையில் பகலில் வெப்பம் கலந்த காலசூழ்நிலை நிலவி வருகிறது.
கொசு தாக்குதல்
இந்த நிலையில், தேயிலை செடிகளில் தேயிலை கொசு தாக்குதல் அதிகரித்து உள்ளது. இந்த வகையான கொசுக்கள் கொழுந்து இ்லையில் அமர்ந்து அதன் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் கருகி விழுந்து விடுகின்றன. இவ்வகை கொசுக்களால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் இந்த வகையான கொசுக்களை கட்டுப்படுத்த தேயிலை செடிகளில் மருந்து தெளிக்கும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
உற்பத்தி பாதிப்பு
தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வரும் அறிவுரையின்படி தேயிலை செடிகளின் மீது அமரும் கொசுக் களை கட்டுப்படுத்த பசை தடவிய மஞ்சள் நிறத்திலான பதாகை களை தேயிலை தோட்ட பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது. இந்த பதாகைகளில் கொசுக்கள் வந்து ஒட்டிக்கொள் கிறது.
இருந்தபோதிலும் கொசுக்கள் தாக்குதல் அதிகமாக இருப்பதால் குயினல்பாஸ் என்ற பூச்சி கொல்லி மருந்தை தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை தேயிலையில் கொசு தாக்குதல் அதிகமாகதான் உள்ளது. இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story