கிணத்துக்கடவில் அடிப்படை வசதி இல்லாத ரெயில் நிலையம்


கிணத்துக்கடவில் அடிப்படை வசதி இல்லாத ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 16 Nov 2021 10:08 PM IST (Updated: 16 Nov 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் அடிப்படை வசதி இல்லாத ரெயில் நிலையம்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

ரெயில் நிலையம் 

போத்தனூர்- பொள்ளாச்சி வழித்தடத்தில் தற்போது கோவை, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப் பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரெயில்கள் இயக்கப் பட்டு வருவதால் கிணத்துக்கடவு பொள்ளாச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

தற்போது இந்த வழித்தடத்தில் கோவையில் இருந்து பழனிக்கு டீசலில் இயங்கும் ரெயிலும், போத்தனூரில் இருந்து பொள் ளாச்சிக்கு மின்சார ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அடிப்படை வசதிகள் இல்லை 

ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து இங்கு வந்து செல்லும் பயணிகள் கூறியதாவது:- 

கிணத்துக்கடவு வழியாக தற்போது ரெயில்கள் இயக்கப்படுவ தால், இங்கு பயணிகள் பலர் வருகிறார்கள். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறை மூடியே கிடக்கிறது. அது திறக்கவில்லை. அதுபோன்று குடிநீர் குழாய் இருக்கிறது. ஆனால் தண்ணீர் வருவது இல்லை. 

பயணிகள் அவதி 

அதுபோன்று போத்தனூரில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் ரெயில் மாலை 6.50 மணிக்குதான் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்துக்கு வருகிறது. அதற்குள் இருள் சூழ்ந்து விடுகிறது. ஆனால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் சாய்வு தள பகுதியில் மின்விளக்குகள் எதுவும் இல்லை. 

இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அதில் இறங்க முதியோர் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக கழிவறை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். 

எனவே உயர் அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story