கைதான பள்ளி முதல்வர் ஜாமீன் கேட்டு மனு
கைதான பள்ளி முதல்வர் ஜாமீன் கேட்டு மனு
கோவை
பாலியல் தொல்லை காரணமாக கோவையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தார். இது தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை (வயது 31) கோவை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத, தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் (52) போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story