என்ஜினீயர் வீட்டில் சி பி ஐ அதிகாரிகள் சோதனை
என்ஜினீயர் வீட்டில் சி பி ஐ அதிகாரிகள் சோதனை
இடிகரை
பெரியநாயக்கன்பாளையம் அருகே என்ஜினீயர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதுடன், மடிக்கணினி, செல் போனை பறிமுதல் செய்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
குழந்தைகளின் ஆபாச படங்களை புழக்கத்தில் விடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, தமிழகம், ராஜஸ்தான், மராட்டியம் உள்பட பல்வேறு இடங்களில் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
மடிக்கணினி பறிமுதல்
இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் ஆதித்தி யன் (வயது 22) என்பவர் வீட்டிற்கு சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் தலைமையில் 4 பேர் காலை 8 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் ஆதித்தியன் வீட்டில் இருந்து மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சந்தேகம்
இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில் ஆதித்தியனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி, செல்போனை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின்னரே மேல்நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.
Related Tags :
Next Story