கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
![கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு](https://img.dailythanthi.com/Articles/2021/Nov/202111172231260542_Vegetable-prices-rise-sharply-in-Kinnathukadavu-market_SECVPF.gif)
கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனையானது.
காய்கறி சந்தை
கிணத்துக்கடவு-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைநிலங் களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த தக்காளி, பச்சை மிளகாய், பொரியல் தட்டை பயிறு, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
விலை கிடுகிடு உயர்வு
தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக தக்காளி கிலோ ரூ.70-க்கும், கத்தரிக்காய் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் வெண்டைக்காய் ரூ.65, பொரியல் தட்டை பயிறு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.26, புடலங்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.44, பீட்ரூட் ரூ.15, சுரைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதனால்தான் அதன் விலை உயர்ந்து இருக்கிறது.
மேலும் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளதால் அதன் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை மொத்த விலை ஆகும். ஆனால் கடைகளில் இதைவிட ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை அதிக விலைக்கு விற்கப்படும் என்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, காய்கறிகளின் விலை உயர்வு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் மழையால் தக்காளி செடிகள் கருகி உள்ளதால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story