அன்னூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்


அன்னூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 17 Nov 2021 10:46 PM IST (Updated: 17 Nov 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்

அன்னூர்

அன்னூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நித்யா. இவர்  பணியின் நிமித்தம் மேட்டுப்பாளை யம் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது பொகளூர் பெட்ரோல் பங்க் அருகே அவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு தம்பதி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு நாய் சாலையின் குறுக்கே ஓடியது. 

இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் நித்யா தனது காரை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். 

அதுபோன்று காரை ஓட்டிய போலீஸ்காரர் வெங்கடேஷ் என்பவரும் அங்கு வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து தம்பதியை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story