13 பேரிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை


13 பேரிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 18 Nov 2021 10:33 PM IST (Updated: 18 Nov 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 13 பேரிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 13 பேரிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

குழந்தை உரிமைகள் ஆணையம்

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த 11-ந் தேதி பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 31) மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (52) ஆகியோரை கைது செய்தனர். 

இந்த நிலையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது குறித்து சென்னையில் உள்ள தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கோவையில் நேற்று விசாரணை நடைபெற்றது.

13 பேரிடம் விசாரணை

அந்த ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ், சரண்யா மற்றும் ராமராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்கள், மாணவியின் பெற்றோர், கைதான ஆசிரியரின் மனைவி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணை முழுவதும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 வரை நடைபெற்றது. விசாரணையை முடிந்து வெளியே வந்த தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக மாணவியின் பெற்றோர், காவல்துறை அதிகாரிகள் உள்பட 13 சாட்சிகளிடம் விசாரணை செய்து உள்ளோம். அந்த அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.


Next Story