செல்போன் பறித்த வாலிபர் கைது

x
தினத்தந்தி 18 Nov 2021 10:34 PM IST (Updated: 18 Nov 2021 10:34 PM IST)
செல்போன் பறித்த வாலிபர் கைது
கோவை
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவர் கோவையை அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 16-ந் தேதி இரவு சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி யுவராஜிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த அபிவிஷ்ணு (23) என்பரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





