சிறுமியை கடத்தி திருமணம் செய்த மணவறை அமைப்பாளர் கைது


சிறுமியை கடத்தி திருமணம் செய்த மணவறை அமைப்பாளர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2021 11:07 PM IST (Updated: 18 Nov 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி திருமணம் செய்த மணவறை அமைப்பாளர் கைது

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த மணவறை அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி கடத்தல்

பொள்ளாச்சி தன்னாச்சியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). மணவறை அமைப்பாளர். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.  இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக  காதலித்து வந்தனர். 

இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் அருண்குமார் அந்த சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று சென்று திருமணம் செய்ததாக தெரிகிறது. 

மணவறை அமைப்பாளர் கைது 

இந்த நிலையில் காணாமல் போன அந்த சிறுமியை பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார்கள். ஆனால் அந்த சிறுமி கிடைக்கவில்லை. 

இதற்கிடையே அருண்குமார்தான் அந்த சிறுமியை சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தியது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அருண்குமார் அந்த சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் அருண் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 


Next Story