தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தெருநாய்கள் தொல்லை
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவு உள்ளது. மேலும் அலுவலகத்துக்கு செல்லும் வாசலில் கும்பலாக படுத்து கிடக்கிறது. அத்துடன் அவை ஒன்றுக்கொன்று சண்டையும் போடுகிறது. இதன் காரணமாக அலுவலகத்திற்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இங்கு அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
ஞானவேல், கூடலூர்.
குண்டும் குழியுமான சாலை
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் சாலை பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழி இருப்பது தெரியவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
விஷ்ணு, சரவணம்பட்டி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டது
கோவை நியூசித்தாபுதூர் வெங்கடசாமி ரோடு பகுதியில் தரை பாலம் அமைக்கப்பட்டது. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுகளை தூர்வாரி சாலையோரம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த கழிவுகள் 2 மாதமாக அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கழிவுகளை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரி களுக்கும் பாராட்டுக்கள்.
கணேசன், கோவை.
ஒளிராத மின்விளக்கு
கோவை தடாகம் சாலை முத்தண்ணன்குளக்கரை சாலையில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் மின்விளக்கு உள்ளது. தற்போது அது பழுதடைந்து உள்ளதால் ஒளிரவில்லை. இதனால் இரவில் அங்கு இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராமல் இருக்கும் மின்விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
ப.ஆனந்த், தெலுங்குபாளையம்.
விபத்தை ஏற்படுத்தும் ரோடு
பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல்கள் இருக்கும் பகுதியில் சாலை பழுதடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
மைதீன், அம்பராம்பாளையம்.
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால், அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதை தடுக்க வேண்டும்.
சத்யா, காந்திமாநகர்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் நடப்பதால் ரெயில்வே பீடர் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டுமு் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
பொதுமக்களை துரத்தும் தெருநாய்கள்
கோவை கணபதி மாநகர் கொங்குநகரில் தெருநாய்கள் நடமாட் டம் அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
அசோகன், கொங்குநகர்.
மரக்கிளைகள் அகற்றப்படுமா?
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து பல்ல டம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெருவிளக்குகள் நன்றாக ஒளிருகிறது. ஆனால் அருகில் உள்ள மரக்கிளைகள் தெருவிளக்குகளை மறைத்து கொள்வதால், போதிய வெளிச்சம் இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
விபத்துகள் நடக்க வாய்ப்பு
பொள்ளாச்சி பஸ்நிலையம் முன்பு சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருசக்கர வாகனங்களில் வரு பவர்கள் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் வருகிறார்கள். இத னால் எந்த நேரத்திலும் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டிகள் ஒரு வழிப்பாதையில் வருவதை தடுக்க வேண்டும்.
குமரன், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story