கல்லூரி திறக்காத விரக்தியில் மாணவி தற்கொலை
கல்லூரி திறக்காத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
சென்னையை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் காலனி, தனலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் பாபு செல்வம். மத்திய அரசு ஊழியர். இவருடைய 2-வது மகள் ஹரிணி(வயது 18). இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்ததால் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆனால் ஹரிணி படிக்கும் கல்லூரி மட்டும் இன்னும் திறக்கப்படாமல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடந்து வருகிறது. இதனால் தன்னால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லையே எனவும், தனது நண்பர்களை நேரில் பார்க்க முடியவில்லையே? என்ற ஏக்கம் காரணமாக மாணவி ஹரிணி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கிய மாணவி ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story