ஆன்லைன் ‘ரம்மி’யில் பணத்தை இழந்த கார் டிரைவர் தற்கொலை
மனைவியின் நகையை அடமானம் வைத்து ஆன்லைன் ‘ரம்மி’ விளையாட்டில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
‘ரம்மி’யில் பணத்தை இழந்தார்
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
ஆன்லைன் ‘ரம்மி’ விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் முருகன், தொடர்ந்து ‘ரம்மி’ விளையாடி வந்தார். அதில் பணத்தை இழந்தாலும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும், தனது மனைவியின் நகையை அடமானம் வைத்தும் கிடைத்த பணத்தில் தொடர்ந்து ‘ரம்மி’ விளையாடினார். இதில் அவர் பல லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த முருகன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது தாய் நெம்மிலியம்மாள் சேலையூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story