தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Nov 2021 10:23 PM IST (Updated: 19 Nov 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி



போக்குவரத்து நெரிசல் 

  கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் மாலையில் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் வெளியே வரும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் பணியில் இல்லாததால், விபத்துக்கள் ஏற்பட்டு மாணவர்கள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார் கள். எனவே காலை மற்றும் மாலையில் போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.
  திலகவதி, கோத்தகிரி.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

  கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து ஹோப் பார்க் செல் லும் சாலையில் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது.இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலையும் பழுதடைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும்.
  ராகவன், கோத்தகிரி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

  கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், செட்டியக்காபாளையம் கிராமத்தில் கிழக்குப்பகுதியில் ஓட்டு வீடு மற்றும் சிமெண்டு சீட்டு அமைக்கப்பட்ட வீடுகளில் தங்கி உள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் உயர்மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் செல்கிறது. இதுகாற்று பலமாக வீசும் போது வீட்டின் மேல் உறசி அடிக்கடி தீ பொறி பறக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்ய வேண்டும்.
  ஜெகதீசன், செட்டியக்காபாளையம்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
இறைச்சி கழிவுகள் அகற்றம்

  கோவை எருக்கம்பெனி பிரபு நகரில் மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டன. இதற்கு மாநகராட்சி தடை விதித்தது. இதை யடுத்து கடைகள் மூடப்பட்டன. ஆனால் அங்கு இறைச்சி கழிவு கள் கொட்டப்பட்டன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப் பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு களை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  கார்த்திக், பிரபுநகர்.

நீர்வழித்தடத்தில் அடைப்பு

  கோவைப்புதூர் 90-வது வார்டு ஜெயா என்கிளேவ் பகுதியில் நீர்வழிப் பாதை உள்ளது. இந்த பாதையை அடைத்து குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் வேறுபாதையில் செல்லும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றி நீர் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும்.
  கோகுலகிருஷ்ணன், கோவைப்புதூர்.

சாலைகளில் திரியும் குதிரைகள்

  கோவை பேரூரை அடுத்த காளம்பாளையம் பகுதியில் சிறுவாணி மெயின் ரோட்டில் ஏராளமான குதிரைகள் சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன் குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டைபோடுவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குதிரைகளை பிடித்துச் செல்ல வேண்டும்.
  ராஜா, காளம்பாளையம்.

பிளாஸ்டிக் கழிவுகள்

  கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து புட்டுவிக்கி சாலை செல்லும் ரவுண்டானா அருகே சாக்கடையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் சரிவர செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.
  சங்கர்குமார், செல்வபுரம்.

சாலையில் மதுபாட்டில்கள் உடைப்பு

  கோவை குனியமுத்தூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மதுபான பிரியர்கள் திறந்தவெளியில் அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். அத்துடன் அவர்கள் சாலையில் பாட்டில்களை தூக்கி வீசுவதால் அவை உடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே டாஸ்மாக் கடை முன்பு திறந்தவெளியில் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க வேண்டும்.
  சந்திரலேகா, குனியமுத்தூர்.

பஸ் வசதி வேண்டும்

  சூலூரில் இருந்து கள்ளபாளையம் வழியாக பொள்ளாச்சிக்கும், இருகூர் வழியாக சத்தியமங்கலத்துக்கும், மாதப்பூர் வழியாக கோபிக்கும், காடம்பாடி, சோமனூர் வழியாக ஈரோடு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் இங்கு செல்பவர்கள் கோவை வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த கோரிக்கையை பரிசீலித்து பஸ்வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
  யாழினி, சூலூர்.

பயன்படாத நிழற்குடை

  கோவை அருகே உள்ள செட்டிபாளையத்தில் நிழற்குடை வசதி உள்ளது. ஆனால் இந்த வசதி பஸ்நிறுத்தம் அருகே வைக்காமல் சில மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடை யாருக்கும் பயனில்லாமல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இதன் காரணமாக பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் இருக்க இடம் இல்லாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே வீணாக கிடக்கும் நிழற்குடையை, பஸ்நிறுத்தம் அருகே அமைக்க வேண்டும்
  மணிகண்டன், செட்டிபாளையம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம் சந்திப்பு முதல் கே.என்ஜி.புதூர் வரை தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  கண்ணன், கோவை.
  
  

1 More update

Next Story