விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை


விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 25 Nov 2021 4:11 PM IST (Updated: 25 Nov 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த விஷார் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் 35 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து விஷார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது:-

காஞ்சீபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆகவே சேதமடைந்த நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story