மாவட்ட செய்திகள்

கொரோனா சிறப்பு வார்டில் திருட்டு + "||" + Corona Special Ward Theft

கொரோனா சிறப்பு வார்டில் திருட்டு

கொரோனா சிறப்பு வார்டில் திருட்டு
திண்டுக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் சிலிண்டரில் இணைக்கப்பட்டிருந்த வால்வுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல்: 

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சுகாதார அமைப்புகள் தெரிவித்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. இதில் திண்டுக்கல் பழைய கோர்ட்டு வளாகத்தில் 75 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் சிறப்பு சிகிச்சை மையம் கட்டப்பட்டது. 

ஆனால் இந்த மையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பூட்டிய நிலையிலேயே இருந்தது. இந்த மையத்தின் வெளிப்புறத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை இணைக்கும் வால்வுகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வால்வுகள் அனைத்தும் திருடு போனதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பழைய கோர்ட்டு வளாகத்துக்கு வந்து பார்வையிட்டனர். 

பின்னர் இதுகுறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன ஆக்சிஜன் சிலிண்டர்களை இணைக்கும் வால்வுகளின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக இதுவரை 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை
திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது.
3. திண்டுக்கல்லில் பலத்த மழை
திண்டுக்கல்லில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
4. திண்டுக்கல்லில் நடந்த சிவாஜி பிறந்தநாள் விழாவில், ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல்லில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவில் பாண்டியன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
5. சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.