பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்; சோத்துப்பாக்கம் ஊராட்சி எச்சரிக்கை


பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்; சோத்துப்பாக்கம் ஊராட்சி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2021 7:11 PM IST (Updated: 26 Nov 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சோத்துபாக்கம் ஊராட்சி. பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது எனவும் அதனை மீறி குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஊராட்சிகள் சட்டம் 1994 படி அபராததொகை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், கடைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் ஊராட்சி மூலமாக குப்பைகளை தரம்பிரித்து பெற்று வருகிறோம். எனவே பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது எனவும் அதனை மீறி குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஊராட்சிகள் சட்டம் 1994 படி அபராததொகை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ஞானபிரகாசம் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் துணைத்தலைவர் அருணகிரி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் வீட்டு உரிமையாளர், குடியிருப்புவாசிகள், வணிகர்கள், சாலையோர கடை வியாபாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் சாலை மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருணகிரி, ஊராட்சி செயலர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story