போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற அண்ணன், தம்பி கைது


போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 8:39 PM IST (Updated: 26 Nov 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே கோட்ரசில் வசித்து வருபவர் நவராஜன். எலெக்ட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது உறவினர்களுக்கு சொந்தமான 87 சென்ட் நிலம் திருவள்ளூர் மாவட்டம், சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை இவர்கள் 2001-ம் ஆண்டு முதல் ஆண்டு அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், பணி நிமித்தமாக நவராஜன் அரக்கோணத்துக்கும் அவரது சகோதரர் செந்தில்குமார் கர்நாடக மாநிலத்துக்கும் சென்று விட்டனர். இந்த நிலையில், அந்த நிலத்தை சென்றாயன்பாளையம் கிராமம், அண்ணா தெருவில் வசித்து வரும் பெரியாண்டவர் என்பவரது மகன்களான சுதாகரன் என்ற சுதாகர் (வயது 41), தமிழ்ச்செல்வன் (32) ஆகியோர் தங்களது தாயார் பரிமளா பெயரில் 2018-ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதை நவராஜன் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி, சிவசங்கரன் ஆகியோர் நேற்று சுதாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story