ஆத்தூர் அருகே தாம்போதி பாலத்தில் மழைவெள்ளம் செல்வதால், திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன

ஆத்தூர் அருகே தாம்போதி பாலத்தில் மழைவெள்ளம் செல்வதால், திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன
x
தினத்தந்தி 26 Nov 2021 9:50 PM IST (Updated: 26 Nov 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே தாம்போதி பாலத்தில் மழைவெள்ளம் செல்வதால், திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன

ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே தாம்போதி பாலத்தில் மழைவெள்ளம் செல்வதால், திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
பாலத்தில் வெள்ளம்
ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர்,தூத்துக்குடி மெயின் ரோட்டில், ஆறுமுகநேரியில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உள்ள தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.
நேற்று காலையில் தண்ணீரில் மூழ்கி சுமார் அரை அடி தண்ணீர் ஓடிய நிலையில் நேரம் ஆக ஆக தண்ணீர் அளவு அதிகரித்து, பகல் 2 மணி அளவில் சுமார் 2 அடி தண்ணீர் சென்றது. இதனால் அந்த பாதையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
மாற்றுப்பாதையில் வாகனங்கள் 
இதை தொடர்ந்து ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் குரும்பூர், சேதுக்குவாய்த்தான், ஏரல், முக்காணி வழியாக தூத்துக்குடிக்கும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு வரக்கூடிய வாகனங்கள் முக்காணி ரவுண்டானாவில் இருந்து ஏரல் சென்று சேதுக்குவாய்த்தான், குரும்பூர் வழியாக மீண்டும் ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் சென்று வருகின்றன.

Next Story