அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவி


அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவி
x
தினத்தந்தி 29 Nov 2021 12:45 AM IST (Updated: 29 Nov 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை மனைவி கொலை செய்தார். அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலூர்,

மேலூரில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை மனைவி கொலை செய்தார். அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அம்மி கல்லை தலையில் போட்டார்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள எம்.மலம்படியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 40). இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சப்-ஏஜெண்டாக வேலை பார்த்து வந்து உள்ளார். இவருடைய மனைவி ஷீலா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
மணிகண்டன் குடிபோதைக்கு அடிமையாகி அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல நேற்று மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் அவரது மனைவி ஷீலாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஷீலா, வீட்டில் இருந்த அம்மி கல்லை தூக்கி மணிகண்டனின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி  மணிகண்டன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

விசாரணை

 இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் ஆகியோர் விரைந்து சென்றார். அங்கு கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவரது மனைவி ஷீலாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story