ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2021 6:37 PM IST (Updated: 29 Nov 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமண ஏற்பாடு

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கலையரசி (வயது 18). இவர் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கலையரசிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிளை பார்த்து கொண்டு இருந்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் கலையரசி மனமுடைந்து விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலையரசி மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டார். கலையரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கலையரசியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கலையரசியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story