காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 884 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 884 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
x
தினத்தந்தி 30 Nov 2021 10:47 AM GMT (Updated: 30 Nov 2021 10:47 AM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 884 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.

884 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 363 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 521 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டின. அதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 884 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

நீர்மட்ட நிலவரம்

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 363 ஏரிகள் 100 சதவீதமும் 17 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவீதமும், 7 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது.



Next Story