ஈரோட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
ஈரோட்டில் காய்கறிகள் விலை கடமையாக உயர்ந்தது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், அதன் விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அதுபோல் ஈரோட்டிலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி, நீலகிரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருவதால் மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் கத்தரிக்காய் விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
வெண்டைக்காய்-ரூ.75, மிளகாய்-ரூ.80, முருங்கைக்காய் -ரூ.150, முள்ளங்கி -ரூ.70, பீர்க்கன்காய்-ரூ.70, பாகற்காய் -ரூ.70, இஞ்சி-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.35, கேரட்-ரூ.60, புடலங்காய் -ரூ.70, அவரை-ரூ.90, சின்ன வெங்காயம்-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.35
Related Tags :
Next Story