கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை இயக்கம்


கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை இயக்கம்
x
கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை இயக்கம்
தினத்தந்தி 1 Dec 2021 9:09 PM IST (Updated: 1 Dec 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை இயக்கம்

கோவை

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும், வெளிநாட்டில் கொழும்பு, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கும் விமான சேவை உள்ளது. இங்கு நாள்தோறும் 30 முதல் 35 விமானங்கள் வந்து செல்கின்றது. இதனால் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம் உள்பட மேற்கு மண்டலத்தினர் பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா முதல் அலையை தொடர்ந்து சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் வந்தே பாரத் மூலம் இந்திய பயணிகளை அழைத்து வரும் விமான சேவையும், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமான சேவையும் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் கடந்த மே மாதம் முதல் மற்ற விமானங்கள் இயக்கப்பட்டன.


இந்தநிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில், கோவை - கோவா இடையே நேற்று முதல் நேரடி சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்படி கோவையில் இருந்து இருந்து இரவு 1.45 மணிக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதிகாலை 3.05 மணிக்கு கோவா சென்று அடைந்தது. 
அதேபோல கோவாவில் இருந்து அதிகாலை 3.35 மணிக்கு 66 பயணிகள் மற்றும் 2 குழந்தைகளுடன் புறப்பட்ட விமானம், அதிகாலை 5.05 மணிக்கு கோவை வந்தடைந்தது. 

கோவை -கோவா இடையேயான விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுவரை கோவையில் இருந்து கோவாவுக்கு நேரடி விமான சேவை இல்லை. பெங்களூரு சென்று அங்கிருந்து தான் கோவா செல்ல முடியும். தற்போதுதான் நேரடி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 

இதேபோல் திருப்பதிக்காண சேவை 16-ந் முதல் தொடங்குகிறது.
 இதன்படி திருப்பதியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு கோவை வந்தடையும். மீண்டும் கோவையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும் என்றனர்.
----

Next Story