துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது
துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே வெள்ளிப் பாளையம் ரோடு சென்னாமலை கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 41) என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், தாமோதரன், போலீசார் சதீஷ், விக்னேஷ், கருப்பசாமி, மனோஜ் குமார், துரைப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுசெல்வத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் எக்ஸ்புளோசிவ் பேஸ்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.அவர் கொடுத்த தகவலின் பேரில் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (40) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வீட்டுக்கு வெளியே 4 அவுட்டு காய்கள் (வெடிகுண்டுகள்) மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது போலீசார் 4 அவுட்டு காய்களையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும்கைது செய்தனர்.
------------------------
Related Tags :
Next Story