முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் கைது


முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 9:44 PM IST (Updated: 2 Dec 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் கைது

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் அருண்பிரசாத்(வயது 28). தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி அவர் கட்சியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை கட்சியை விட்டு நீக்கியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கிளை செயலாளர் சிவக்குமாரிடம் கேட்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிவக்குமாரின் மனைவி தேன்மொழியை(34) திடீரென தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் கையை பிடித்து இழுக்க முயன்றதால் தேன்மொழி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வந்தனர்.

பின்னர் சிவக்குமாருக்கும், தேன்மொழிக்கும் கொலை மிரட்டல் விடுத்த அருண்பிரசாத் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் தேன்மொழி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருண்பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, பொள்ளாச்சி ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story