கோவையில் சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பிடிபட்டன


கோவையில் சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 2 Dec 2021 10:14 PM IST (Updated: 2 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பிடிபட்டன

கோவை

கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த  9 மாடுகள் பிடிபட்டன. 

சாலையில் சுற்றிய மாடுகள் 

கோவை சுங்கம் மற்றும் உக்கடம் பகுதிகளில் எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில் மாடுகள் சாலைகளில் அடிக்கடி நடமாடி வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

இதன் காரணமாக அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். 

9 மாடுகள் பிடிபட்டன

இதையடுத்து மாநகராட்சி  அதிகாரிகள் கால்நடைகளை சாலையில் சுற்ற விடக்கூடாது என்றும், அதை மீறி திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இருந்த போதிலும் மாடுகளின் உரிமையாளர்கள் அதை கண்டுகொள்ள வில்லை.

இதனால் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதியில் சாலையோரம் மாடுகள் சுற்றியது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து அங்கு சுற்றித் திரிந்த 9 மாடுகளை பிடித்து கோவை வ.உ.சி. பூங்காவில் ஒப்படைத்தனர்.

அபராதம் 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு உள் ளன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதை செலுத்திய பின்னரே மாடுகள் ஒப்படைக்கப்படும். இதுபோன்று மாடுகளை சாலையில் திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

1 More update

Next Story