தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 10:25 PM IST (Updated: 2 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

  
பவானி ஆற்றில் கழிவுகள்

  மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறு செல்கிறது. இந்த ஆறு மூலம் ஏராளமான கிராமங்கள் குடிநீர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் பவானி ஆற்றில் ஏராளமான கழிவுகள் கலக்கின்றன. இதனால் ஆற்றின் மேல்பகுதி நன்றாக இருந்தாலும், அடிப்பகுதியில் கழிவுகள் கலந்து செல்கிறது. இதனால் ஆறு மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
  மோகன்ராஜ், மேட்டுப்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை மாநகராட்சி 28-வது வார்டு சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போடுவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
  குருநாதன், சின்னமேட்டுப்பாளையம். 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது

  வெள்ளலூர் மகாலிங்கபுரம் கிருஷ்ணசாமி நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  மணிகண்டன், கிருஷ்ணசாமி நகர்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ரெயில்வே பீடர் ரோடு பழுதாகி மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை நல்லாம்பாளையம் சாலையில் சீவலபுரி அம்மன் நகர் உள்ளது. இங்கு கடந்த 20 நாட்களாக மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் தெருவில் நடமாடி வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
  பழனிசாமி, சீவலபுரி அம்மன் நகர்.

பிச்சைக்காரர்கள் தொல்லை

  கோவை பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரியை அடுத்து 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவது அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் விபத்துகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிச்சைக்காரர்கள் தொல்லையை நீக்க வேண்டும்.
  ரவி, ஈச்சனாரி.

நிரம்பி வழியும் குப்பை தொட்டி

  கோவை கணபதி செக்கான்தோட்டம் பகுதியில் 7 வீதிகள் உள்ளன. இங்கு குப்பை தொட்டிகள் மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது. அதுவும் தினமும் அகற்றப்படுவது இல்லை. இதனால் குப்பை தொட்டிகள் உடனடியாக நிரம்பி வழிகிறது. இதனால் குப்பைகளை சாலையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அகற்றுவதுடன், கூடுதல் குப்பை தொட்டியும் வைக்க வேண்டும்.
  சுரேஷ், கணபதி.

பாதுகாப்பு உபகரணங்கள் தேவை

  கோவையை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பு இல்லாமல் பணி செய்வதால் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்வாரிய ஊழியர்கள் வேலை செய்யும்போது பாதுகாப்பாக வேலை செய்ய உரிய உபகரணங்களை வழங்க வேண்டும்.
  மணியரசு, கோவை.


Next Story