தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை


தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை
x
தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை
தினத்தந்தி 3 Dec 2021 9:26 PM IST (Updated: 3 Dec 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை

போத்தனூர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் ஒரு தனியார் ஷோரூமில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்வேலை முடிந்து செல்லும் போது  வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 

இந்தநிலையில் சம்பவத்தன்று இளம்பெண் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள சுகுணாபுரம் பாலம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் அந்த வாலிபர் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரின் குடும்பத்தினர் அவர்களை தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட வாலிபர் சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த முகமது நபி (30) என்பதும், அதற்கு உடந்தையாக அவரது  தம்பி முகமது நவ்ஷாத் (27) இருந்ததும் தெரியவந்தது. 
மேலும் இருவரும் தட்டிக்கேட்ட அந்த இளம் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை தாக்கி மிரட்டியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்

Next Story