கோவையில் 127 பேருக்கு கொரோனா
கோவையில் 127 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 121 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 111 பேர் நேற்று குணமடைந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 470 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story