பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
தினத்தந்தி 3 Dec 2021 10:03 PM IST (Updated: 3 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

கோவை


கோவை செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர் வீட்டில் இருந்த போது அவருடைய மகனின் நண்பர் பரத்குமார் (35) என்பவர் வந்துள்ளார். அவர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் விஜயலட்சுமி நகை தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த, பரத்குமார் அவரை தாக்கினார். இதனால் கூச்சலிட்ட விஜயலட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். உடனே பரத்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரத்குமாரை கைது செய்தனர்.

Next Story