பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
x
பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
தினத்தந்தி 3 Dec 2021 10:13 PM IST (Updated: 3 Dec 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு

போத்தனூர்

கோவை ஈச்சனாரி ராஜ விஜயநகரை சேர்ந்தவர் ஹரிராம பிரசாத். இவருடைய மனைவி வாசுகி (வயது27). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இவர்களுடன் வாசுகியின் தாய் சரஸ்வதியும் (78) வசித்து வருகிறார். ஹரிராமபிரசாத், வேலை விஷயமாக வெளியே சென்றார். வீட்டில் வாசுகி இருந்த போது மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து வாசுகியின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க நகைகளை பறித்தனர். 

அப்போது வாசுகியின் மகள் அழத்தொடங்கியது. உடனே அந்த குழந்தையை மிரட்டி அமைதியாக இருக்க செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story