பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:53 PM IST (Updated: 4 Dec 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி

வால்பாறை கல்லார்குடி தெப்பக்குளமேடு பகுதியில் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அங்கு போடப்பட்ட குடிசைகளை வனத்துறையினர் பிரித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் வனத்துறையினர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பட்டா வழங்கிய இடத்தில் பழங்குடியின மக்கள் அச்சமின்றி வசிக்க தமிழக அரசு உரிய வழிமுறைகளை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் அரசியல் கட்சி, சமூக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story