பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130 பேருக்கு கொரோனா
x
பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 4 Dec 2021 10:38 PM IST (Updated: 4 Dec 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 681ஆக உயர்ந்து உள்ளது.


கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 471 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story