ரெயில் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரெயில் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை (திங்கட்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பிறகே ரெயில்வே பாதுக்காப்புப்படையினர் பயணிகளை ரெயில்களில் பயணிக்க அனுமதித்து வருகின்றனர்.
அத்துடன் கோவையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரிலிருந்து கோவைக்கும் அனுப்பி வைக்கப்படும் பார்சல்கள் குறித்து பார்சல் அலுவலகத்தில் எந்த மாதிரியான பொருட்கள் அனுப்பப் படுகிறது என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று காலை கோவை வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இது தவிர கோவை ரெயில் நிலையத்துக்குள் வரும் கோவை மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் கார்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பாபர் மசூதி தினம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story