சைதாப்பேட்டை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆஜர்


சைதாப்பேட்டை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆஜர்
x
தினத்தந்தி 5 Dec 2021 2:16 PM IST (Updated: 5 Dec 2021 2:16 PM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு தொடர்பான உறுதிமொழி வாக்குமூலத்தை அளித்தார்.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர 18-வது கோர்ட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு ‘யூடியூபர்ஸ்’ மாரிதாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தன்னை பற்றியும், தனது தாத்தாவும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி பற்றியும் அவதூறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பியதால் அவர்கள் மீது அவதூறு கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு தொடர்பான உறுதிமொழி வாக்குமூலத்தை அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Next Story