ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி


ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 5 Dec 2021 5:14 PM IST (Updated: 5 Dec 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையில் கிரில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணணூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் ஊழியர்கள் நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் கிரில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து வயர்களும் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக நேற்று முன்தினம் விற்பனை செய்த பணத்தை மறைவாக வைத்திருந்த நிலையில் பணம் கொள்ளை போகவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story