மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
செம்மஞ்சேரி பகுதி உள்கட்டமைப்பை சரிசெய்து மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் வசிக்ககூடிய மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் பருவமழை காலங்களில் பாதிப்படையும் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதி உள்கட்டமைப்பை சரிசெய்து போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story