கோவையில் ரெயில் பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை


கோவையில் ரெயில் பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 6 Dec 2021 10:23 PM IST (Updated: 6 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரெயில் பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை

கோவை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி  கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை மாநகரில் முக்கிய இடங்களில் 1,400 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

கோவை ரெயில் நிலையம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப் பாளையம் ரோடு பஸ்நிலையம் மற்றும் விமான நிலையத்தில்  மோப்ப நாய் மூலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.அத்துடன் பயணிகளின் உடைைமகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனை மேற்கொண்டனர். 

இது தவிர உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 


Next Story