மின்கம்பத்தில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை மிரட்டல்
மின்கம்பத்தில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை மிரட்டல்
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே மின்கம்பத்தில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது.
வடமாநில வாலிபர்
அசாம் மாநிலம் குர்கான் கிராமத்தை சேர்ந்தவர் திவாகர் கியூரி (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருமத்தம்பட்டி அருகே உள்ள செங்கோடகவுண்டன்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்தார்.
இந்த நிலையில் ஒரு வாரமாக குடும்பத்தை விட்டு பிரிந்ததால் திவாகர் கியூரிக்கு மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் செங்கோடன்கவுண்டன்புதூரில் இருந்து கணியூர் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதிக்கு நடந்தே வந்தார்.
மின்கம்பத்தின் மீது ஏறினார்
குடும்பத்தைவிட்டு பிரிந்து வேலைக்கு செல்ல அவருக்கு மனமும் இல்லை, சொந்த ஊருக்கு திரும்பி செல்ல பணமும் இல்லை. இதனால் செய்வது அறியாமல் திகைத்த திவாகர் கியூரி, அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அருகே சிறிது நேரம் நின்றார். பின்னர் அவர் திடீரென்று அந்த மின்கம்பத்தின் மீது ஏறினார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர் கள் உடனடியாக இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் உடனே அங்கு மின்வினியோகம் தடை செய்யப்பட்டது.
தற்கொலை மிரட்டல்
இதற்கிடையே அந்த மின்கம்பத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கு இருந்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு வந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது டன், கீழே இறங்கும்படி கூறினார்கள்.
இதையடுத்து 20 நிமிடம் கழித்து கீழே இறங்கி வந்த திவாகர் கியூரிக்கு தக்க அறிவுரையை போலீசார் வழங்கியதுடன் உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story