பொள்ளாச்சியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:43 PM IST (Updated: 6 Dec 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி

பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும். மசூதியை இடித்த நபர்களுக்கு தண்டனை வழங்க கோரி  பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கு பொள்ளாச்சி தொகுதி தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இதுபோல் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கபூர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story