ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ62 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ62 லட்சம் உண்டியல் காணிக்கை
பொள்ளாச்சி, டிச.8-
ஆணைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் ரூ.62 லட்சம் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
மாசாணியம்மன் கோவில்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி காணிக்கை செலுத்துகின்றனர்.
இதற்காக கோவில் வளாகத்தில் 9 தட்டு காணிக்கை மற்றும் 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. உண்டியல்களை மாதந்தோறும் திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, மருதமலை முருகன் கோவில் தக்கார் விமலா, ஈச்சனாரி கோவில் உதவி ஆணையர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
ரூ.62 லட்சம் வருமானம்
இந்த பணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வளாகத்தில் இருந்த தட்டு காணிக்கை மற்றும் நிரந்தர உண்டியல்கள் எண்ணப்பட்டன. தட்டு காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்து 317, நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.46 லட்சத்து 70 ஆயிரத்து 145 சேர்த்து மொத்தம் ரூ.62 லட்சத்து 3 ஆயிரத்து 462 வருமானமாக கிடைத்தது.
இதை தவிர 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளி கிடைத்தன. இதில் கண்காணிப்பாளர்கள் தமிழ்வாணன், அர்ச்சுனன், ஆய்வாளர்கள் குறிஞ்சிசெல்வி, ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story