மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உலக மண்வள தின விழா மற்றும் மண் வளம் குறித்து பயிற்சி நடந்தது. இதில், சுல்தான் பேட்டை துணை வேளாண்மை அலுவலர் சந்தியகு இருதயராஜ் பேசுகையில், மண்வளம் பாதுகாப்பதற்கு இயற்கை உரங்கள், தொழு உரம், ஆட்டு உரம், பசுந்தாள் உரம், மண்புழு உரம் இட்டு மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
அதிக அளவில் ரசாயன உரம் பயன்படுத்தாமல் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் அளவில் ரசாயன உரங்களை இட்டு மண் வளம் கெடதாபடி பாதுகாக்க வேண்டும். இந்த முறைபடி செய்தால் வீண் விரயம் ஆகாது. களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்து வளமான நிலங்களை மாற்றுவது பற்றியும் பேசினார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் அண்ணாமலை, ரமேஷ், குமணன், சிவசங்கர், மற்றும் அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் குப்புத்துரை, ஜெயபிரகாஷ் உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story