கோவையில் ரூ 1 கோடியே 31 லட்சம் கொடிநாள் நிதி இலக்கு
கோவையில் ரூ 1 கோடியே 31 லட்சம் கொடிநாள் நிதி இலக்கு
கோவை
கோவையில் இந்த ஆண்டு ரூ.1.31 கோடி கொடிநாள் நிதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
கொடி நாள்
நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொடி நாளை முன்னிட்டு நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிதி வசூல் செய்யும் பணியை கலெக்டர் சமீரன் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் இது குறித்து கூறியதாவது:- கொடிநாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டு அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எய்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4,370 முன்னாள் படை வீரர்களும், 2,070 விதவைகளும் உள்ளனர்.
ரூ.1.31 கோடி இலக்கு
கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 59 லட்சத்து 87 ஆயிரத்து 500 வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் ரூ.1 கோடியே 31 லட்சத்து 78 ஆயிரம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே கொடிநாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மிகை கொடிநாள் நிதி வசூல் செய்த அதிகாரிகளுக்கு வெள்ளிப்பதக்கம், தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
மேலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் திருமண உதவித்தொகை, 15 மாணவ- மாணவி களுக்கு ரூ.3.40 லட்சம் கல்வி உதவித்தொகை, முன்னாள் படை வீரருக்கு ரூ.16,771 வங்கி கடன் வட்டி மானியம், முன்னாள் படைவீரர் மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.4 ஆயிரம் மாதாந்திர நிதி உதவி தொகை என ரூ 4.10 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ்கோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story